மதுரை: மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரியில் முதலாவது நக்கீரர் ஆய்வரங்கம் நடந்தது.
தமிழாய்வுத் துறை உதவிப்பேராசிரியர் சத்தியா தலைமை வகித்தார். தமிழாய்வுத் துறை தலைவர் சந்திரா திருச்செந்துார் வழிநடைச்சிந்து அமைப்பும், சிறப்பும் என்ற தலைப்பில் பேசினார். முதுகலை மாணவி கோகிலா நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழில் தலச் சிறப்பு என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார். ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியர் விஜயம் செய்திருந்தார்.