ADDED : அக் 22, 2025 12:37 AM
மதுரை: மதுரை ஜான்சிராணி பூங்காவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய சுதந்திர இந்திய தற்காலிக அரசின் 83 ம் ஆண்டு விழா நடந்தது.
பூங்கா வளாகத்தில் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நேதாஜி தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். நேதாஜி ஆட்டோ ஓட்டுநர் சங்கம், பொதுமக்கள் பங்கேற்றனர். இரண்டாம் உலகப்போரில் நேதாஜி யுத்த பிரகடனம் செய்த வரலாற்று தகவல்கள் பகிரப்பட்டன. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


