ADDED : செப் 26, 2025 04:42 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டப்பணிகளை புறக்கணித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துணை தாசில்தார்கள் ராஜ்குமார், தாணுமூர்த்தி, வேலு, சுமன், சசிகுமார், முருகன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் வழங்கவேண்டும்.
ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கைவிடவேண்டும். முகாம்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.