/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ பைக் - லாரி மோதி கல்லுாரி மாணவர்கள் பலி பைக் - லாரி மோதி கல்லுாரி மாணவர்கள் பலி
பைக் - லாரி மோதி கல்லுாரி மாணவர்கள் பலி
பைக் - லாரி மோதி கல்லுாரி மாணவர்கள் பலி
பைக் - லாரி மோதி கல்லுாரி மாணவர்கள் பலி
ADDED : மார் 21, 2025 01:43 AM

மயிலாடுதுறை:சீர்காழி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில், பைக்கில் சென்ற கல்லுாரி மாணவர்கள் இருவர் பலியாகினர்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் புவனேஷ், 23. கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு, வீரன் கோவில் தீட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வம், 20.
இருவரும் புத்துார் எம்.ஜி.ஆர்., அரசு கல்லுாரியில் பி.பிஏ. இறுதி ஆண்டு படித்தனர். நெருங்கிய நண்பர்களான இருவரும் சேர்ந்து கல்லுாரிக்கு செல்வது வழக்கம்.
நேற்று காலை, செல்வம் ஹோண்டா ஷைன் பைக்கில் புவனேஷை அழைத்துக்கொண்டு கல்லுாரிக்கு சென்ற போது, எதிரே அதிவேகமாக வந்த டாரஸ் லாரி மோதியதில், செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புவனேஷ் சீர்காழி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
ஆனைக்காரன் சத்திரம் போலீசார், ஆனந்தகூத்தன் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் கந்தனை கைது செய்தனர்.