/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விதிமீறி செயல்படும் இளம் புழு மையம் விதிமீறி செயல்படும் இளம் புழு மையம்
விதிமீறி செயல்படும் இளம் புழு மையம்
விதிமீறி செயல்படும் இளம் புழு மையம்
விதிமீறி செயல்படும் இளம் புழு மையம்
ADDED : ஜூன் 29, 2024 02:58 AM
நாமக்கல்: 'விதிமுறை மீறி செயல்படும் இளம் புழு மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் சங்கத்தின், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில், நேற்று நடந்தது. மாநில தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
செயலாளர் பொன்னுசாமி, பொருளாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தரமான முட்டைகள் வழங்க வேண்டும். இளம் புழு மையங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி தரமான புழுக்களை விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய வேண்டும்.
விதிமுறை மீறி செயல்படும் இளம் புழு மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அளவில், உற்பத்தி பாதிப்பு, வறட்சி நிவாரணம் கேட்டு விவசாயிகள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.