/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வலு துாக்கும் போட்டியில் வெற்றி: மாணவிக்கு பாராட்டு வலு துாக்கும் போட்டியில் வெற்றி: மாணவிக்கு பாராட்டு
வலு துாக்கும் போட்டியில் வெற்றி: மாணவிக்கு பாராட்டு
வலு துாக்கும் போட்டியில் வெற்றி: மாணவிக்கு பாராட்டு
வலு துாக்கும் போட்டியில் வெற்றி: மாணவிக்கு பாராட்டு
ADDED : ஜூன் 30, 2024 01:44 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி, 20; கல்லுாரி மாணவி. இவர், பஞ்சாப் மாநிலத்தில், இந்திய அளவிலான தேசிய வலு துாக்கும் போட்டி, கடந்த, 16ல் நடந்தது. இப்போட்டியில், 63 கிலோ எடைப்பிரிவில், தேன்மொழி முதலிடம் பிடித்து, 4 தங்க பதக்கம் பெற்றார்.
மேலும், பென்ச் ப்ரஸ், டெட் லிப்ட் மற்றும் ஓவர் ஆல் என, போட்டிகளில் வெற்றி பெற்று, 'இரும்பு பெண்மணி' என்ற பட்டத்தை பெற்றார். வெற்றி பெற்ற மாணவி தேன்மொழியை, பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ் வாழ்த்தினார்.