/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 28ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு மாவட்டத்தில் 55 மையம் அமைப்பு 28ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு மாவட்டத்தில் 55 மையம் அமைப்பு
28ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு மாவட்டத்தில் 55 மையம் அமைப்பு
28ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு மாவட்டத்தில் 55 மையம் அமைப்பு
28ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு மாவட்டத்தில் 55 மையம் அமைப்பு
ADDED : செப் 25, 2025 02:02 AM
நாமக்கல் :''வரும், 28ல், மாவட்டத்தில், 55 மையங்களில் நடக்கும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வை, 16,108 பேர் எழுதுகின்றனர்,'' என, கலெக்டர் துர்கா மூர்த்தி பேசினார்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 'ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-2' (குரூப்-2, குரூப்-2ஏ) பதவிகளுக்கான போட்டித்தேர்வு, வரும், 28ல் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு, 2 போட்டித்தேர்வுகள், வரும், 28 காலை, 9:30 மணிக்கு தொடங்கி மதியம், 12:30 மணி வரை நடக்கிறது. நாமக்கல், ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு தாலுகாவில், மொத்தம், 55 தேர்வு மையங்களில், 16,108 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்விற்கு, துணை கலெக்டர் நிலையில், ஆறு பறக்கும் படை அலுவலர்கள், டி.ஆர்.ஓ., 4 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வர்கள் போட்டி தேர்வை எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளை எழுதும் தேர்வர்கள், தேர்வு கூடங்களுக்குள் காலை, 9:00 மணிக்கு முன்பாக சென்றுவிடவேண்டும். அதன்பின் வருபவர்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதியில்லை.
நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சரியாக மேற்கொண்டு, சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., சுமன், செயலாட்சியர் குப்புசாமி, இணைப்பதிவாளர் யசோதாதேவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு உட்பட பலர் பங்கேற்றனர்.