/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ இரு கிராமங்களுக்கு இடையே சுடுகாட்டு பிரச்னை பேச்சு தோல்வியால் அமைதி காக்க வேண்டுகோள் இரு கிராமங்களுக்கு இடையே சுடுகாட்டு பிரச்னை பேச்சு தோல்வியால் அமைதி காக்க வேண்டுகோள்
இரு கிராமங்களுக்கு இடையே சுடுகாட்டு பிரச்னை பேச்சு தோல்வியால் அமைதி காக்க வேண்டுகோள்
இரு கிராமங்களுக்கு இடையே சுடுகாட்டு பிரச்னை பேச்சு தோல்வியால் அமைதி காக்க வேண்டுகோள்
இரு கிராமங்களுக்கு இடையே சுடுகாட்டு பிரச்னை பேச்சு தோல்வியால் அமைதி காக்க வேண்டுகோள்
ADDED : செப் 25, 2025 02:02 AM
ப.வேலுார் :இரு கிராமங்களுக்கு இடையே சுடுகாட்டு பிரச்னை குறித்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், அமைதி காக்க போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ப.வேலுார் அருகே, வெங்கரை டவுன் பஞ்.,க்குக்கு உட்பட்ட திட்டமேடு மற்றும் கள்ளிபாளையத்தை சேர்ந்த கிராம மக்களிடம் சுடுகாடு பிரச்னை குறித்து இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. சில நாட்களுக்கு முன், இரு தரப்பினரும் சுடுகாடு இடத்திற்கு உரிமை கோரி போராட்டம் செய்தனர்.
இந்நிலையில் திட்டமேடு மற்றும் கள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த இரு தரப்பு பொதுமக்களை, பேச்சுவர்த்தைக்கு தாசில்தார் கோவிந்தசாமி அழைப்பு விடுத்தார். அதன்படி, நேற்று ப.வேலுார் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் குழந்தைசாமி, ப.வேலுார் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.ஒரு தரப்பினர், இறந்தவர்களின் சடலத்தை தங்கள் பகுதியில் உள்ள திட்டமேடு சுடுகாட்டிற்கு எடுத்து செல்லக்கூடாது எனவும், அவர்கள் பகுதியிலேயே உள்ள சுடுகாட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறினர். இதற்கு மற்றொரு தரப்பினர், பல தலைமுறைகளாக திட்டமேடு, சுடுகாட்டை பயன்படுத்தி வருகிறோம்; இதற்கு தடை போடக்கூடாது எனக்கூறினர்.
பல மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், ப.வேலுார் தாசில்தார் குழந்தைசாமி, இரு தரப்பினர் இடையே தற்போது நடந்த பேச்சுவார்த்தை குறித்து திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அவர்களிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அடுத்த பேச்சுவார்த்தை ஆர்.டி.ஓ., தலைமையில் நடைபெறும் என தெரிவித்தார். தொடர்ந்து, ப.வேலுார் இன்ஸ்பெக்டர் சிவகுமார் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையில், இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். இதுநாள் வரை வரை நடைமுறையில் உள்ளபடியே சுடுகாட்டை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுடுகாட்டை சுற்றி சுவர் எழுப்பக் கூடாது. அப்பகுதியில் சுடுகாட்டுக்கு இறந்தவர்களின் உடலை கொண்டு போகும்போது தடுக்கக்கூடாது என அறிவுறுத்தினார்.
மேலும், அப்பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் இரு தரப்பினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இரு தரப்பினரை அழைத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என, தெரிவித்தார்.