/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல்லில் பழைய இரும்பு கடையில் திடீர் தீ விபத்துநாமக்கல்லில் பழைய இரும்பு கடையில் திடீர் தீ விபத்து
நாமக்கல்லில் பழைய இரும்பு கடையில் திடீர் தீ விபத்து
நாமக்கல்லில் பழைய இரும்பு கடையில் திடீர் தீ விபத்து
நாமக்கல்லில் பழைய இரும்பு கடையில் திடீர் தீ விபத்து
ADDED : பிப் 25, 2024 03:40 AM
நாமக்கல்: நாமக்கல், சேலம் சாலையில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் சுப்ரமணி. இவரது கடையில் பழைய டயர்கள், லாரி உதிரி பாகங்கள் உள்ளிட்டவைகளை குவித்து வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று பகல், 12:00 மணிக்கு கடையில் இருந்த பழைய பொருட்களில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென பரவி எரிய துவங்கியது. நாமக்கல் தீயணைப்புபடை வீரர்கள், தண்ணீர் பீய்ச்சி அடித்து, தீ மேலும் பரவாமல் தடுத்தனர். 2 மணி நேரம் போராட்டத்துக்கு பின், தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த தீ விபத்தில், உடைப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இரண்டு பழைய கார்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது. அருகில் உள்ள முட்புதருக்கு வைக்கப்பட்ட தீ பரவி, பழைய இரும்பு கடைக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.