/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/அக்னிவீர் வாயு விமானப்படையில் இணைய விண்ணப்பிக்க அழைப்புஅக்னிவீர் வாயு விமானப்படையில் இணைய விண்ணப்பிக்க அழைப்பு
அக்னிவீர் வாயு விமானப்படையில் இணைய விண்ணப்பிக்க அழைப்பு
அக்னிவீர் வாயு விமானப்படையில் இணைய விண்ணப்பிக்க அழைப்பு
அக்னிவீர் வாயு விமானப்படையில் இணைய விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 28, 2024 01:59 AM
நாமக்கல், அக்னிவீர் வாயு இந்திய விமானப்படையில் இணைய, ஆன்லைனில் விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் ஜூலை, 8 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம். அக்., 18ம் தேதி தேர்வு நடக்கிறது. விண்ணப்பதாரர்கள், 3.7.2004 முதல், 3.1.2008 தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். கல்வித்தகுதி, 12ம் வகுப்பு அல்லது மூன்று வருட பட்டய படிப்பு அல்லது தொழில் படிப்பு பயின்றிருக்க வேண்டும். ஆங்கில பாடத்தில், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் இத்தேர்வு குறித்த விபரங்களை, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் தெரிந்து கொள்ளலாம் அல்லது 04286 222260 மூலம் தொடர்பு கொள்ளலாம். நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த தகுதி வாய்ந்த நபர்கள், இத்தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.