/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆஞ்சநேயர் கோவிலில் தரிசன சீட்டு வழங்கும் பணியிடத்திற்கு நேர்காணல்ஆஞ்சநேயர் கோவிலில் தரிசன சீட்டு வழங்கும் பணியிடத்திற்கு நேர்காணல்
ஆஞ்சநேயர் கோவிலில் தரிசன சீட்டு வழங்கும் பணியிடத்திற்கு நேர்காணல்
ஆஞ்சநேயர் கோவிலில் தரிசன சீட்டு வழங்கும் பணியிடத்திற்கு நேர்காணல்
ஆஞ்சநேயர் கோவிலில் தரிசன சீட்டு வழங்கும் பணியிடத்திற்கு நேர்காணல்
ADDED : ஜூன் 28, 2024 01:59 AM
நாமக்கல், நாமக்கல் நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சனை மற்றும் தரிசன சீட்டு வழங்கும் இரு பணியிடத்திற்கான நேர்காணல், நேற்று ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில் நடந்தது.
நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவில்கள் அமைந்துள்ளன. இங்கு, அர்ச்சனை சீட்டு, தரிசன சீட்டு வழங்கும் இரு பணியிடம் காலியாக இருந்தது. அதனை நிரப்பும் வகையில், கோவில் நிர்வாகம் சார்பில் சமிபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் இருந்து, 1,050 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு, ஜூன் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் ஆஞ்சநேயர் கோவில் பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் நேர்காணல் நடைபெறுகிறது. கோவில் உதவி ஆணையர்கள் இளையராஜா, ரமணிகாந்தன் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்ந்த கேள்விகள் விண்ணப்பதாரர்களிடம் கேட்கப்பட்டன. நேர்காணலுக்கு பிறகு, தகுதியின் அடிப்படையில் இரு பணியிடங்களும் நிரப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.