/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மர்ம ட்ரோன்கள் நடமாட்டம் விமான நிலையங்கள் மூடல் மர்ம ட்ரோன்கள் நடமாட்டம் விமான நிலையங்கள் மூடல்
மர்ம ட்ரோன்கள் நடமாட்டம் விமான நிலையங்கள் மூடல்
மர்ம ட்ரோன்கள் நடமாட்டம் விமான நிலையங்கள் மூடல்
மர்ம ட்ரோன்கள் நடமாட்டம் விமான நிலையங்கள் மூடல்
ADDED : செப் 26, 2025 02:19 AM
கோபன்ஹேகன் டென்மார்க்கில், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் தாக்குதல் அச்சத்தால் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டன.
ஐரோப்பாவின் பல நாடுகளில் சமீபத்தில், விமான சேவைக்கான தொழில்நுட்பத்தில் இணையத் திருடர்கள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்தியதால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், டென்மார்க் உட்பட பல நாடுகளின் விமான நிலையங்களில் ட்ரோன்கள் பறந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், டென்மார்க்கின் கோபன்ஹேகன் உட்பட பல விமான நிலையங்களில், ட்ரோன் நடமாட்டம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சில விமான நிலையங்கள் சிறிது நேரம் மூடப்பட்டன. அதே நேரத்தில், வணிக மற்றும் ராணுவ விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆல்போர்க் விமான நிலையம் நேற்று முழுதும் மூடப்பட்டது.
இதுபோல், எஸ்ப்ஜெர்க் மற்றும் சோண்டர்போர்க்கில் உள்ள விமான நிலையங்களிலும், போர் விமானங்களின் பராமரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ராணுவப் பகுதியான ஸ்க்ரிட்ஸ்ட்ரப் விமானத் தளத்திலும் ட்ரோன்கள் காணப்பட்டன.