/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ திருச்செங்கோடு செங்குந்தர் இன்ஜி., கல்லுாரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு திருச்செங்கோடு செங்குந்தர் இன்ஜி., கல்லுாரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு
திருச்செங்கோடு செங்குந்தர் இன்ஜி., கல்லுாரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு
திருச்செங்கோடு செங்குந்தர் இன்ஜி., கல்லுாரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு
திருச்செங்கோடு செங்குந்தர் இன்ஜி., கல்லுாரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு
ADDED : செப் 26, 2025 02:19 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோடு, செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லுாரியில் தேசிய அளவிலான மாணவர் தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.
செங்குந்தர் கல்வி குழுமத்தின் தலைவர் ஜான்சன் நடராஜன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சதிஷ்குமார் வரவேற்றார். தாளாளர் பாலதண்டபாணி, பொருளாளர் தனசேகரன், செயல் இயக்குனர் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோர் முனனிலை வகித்தனர்.
கோயம்புத்தார், விஷனெட் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் மண்டல தலைவர் அஸ்வின், கல்லுாரி சார்பாக குறுந்தகடு வெளியிட்டு பேசுகையில்,' மாணவ, மாணவியர் புதிய தொழில் நுட்பத்தை கற்று தங்களை எப்போதும் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மாணவ, மாணவியர் திறமையாகவும், நற்பண்புகளுடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்,' என்றார்.
கருத்தரங்கில், 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகையும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.