/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சிபுதிய பாரத எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
ADDED : மே 14, 2025 02:02 AM
எலச்சிபாளையம் எலச்சிபாளையம் வட்டார வள மையத்திற்குட்பட்ட, 39 மையத்தை சேர்ந்த தன்னார்வலர்களுக்கு, நேற்று புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், ஒருநாள் சிறப்பு பயிற்சி நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகாலிங்கம் துவக்கி வைத்தார்.
முழு எழுத்தறிவு பெற்ற வட்டாரமாக மாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, கணக்கெடுப்பு பணி முழுமையாக மேற்கொள்வது, எழுத்தறிவின் முக்கியத்துவம், அவர்கள் கற்போருக்கு கற்றுத்தர வேண்டிய பாடம் குறித்து விளக்கப்பட்டது. தொடர்நது, எழுத்தறிவு உறுதிமொழி எடுக்கப்பட்டது. வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் செந்தமிழ் பயிற்சியளித்தார்.