/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/புதிய பஸ் விடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சிபுதிய பஸ் விடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
புதிய பஸ் விடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
புதிய பஸ் விடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
புதிய பஸ் விடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 28, 2024 01:17 AM
குமாரபாளையம், குமாரபாளையத்தில், புதிய பஸ் விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
குமாரபாளையத்திலிருந்து, திருச்செங்கோட்டிற்கு நான்கு டவுன் பஸ்கள் செயல்பட்டு வருகிறது. வழியில் ஏராளமான கிராமங்கள் உள்ளதால், அங்கிருந்து குமாரபாளையம் பகுதிக்கு விசைத்தறி, கைத்தறி, சாயப்பட்டறை உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லவும், குமாரபாளையம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகளில் பயிலவும் பெரும்பாலோர் குமாரபாளையம் வருகின்றனர்.
இதனால் மேலும் அதிக பஸ்களை விட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே வந்து கொண்டிருந்த நான்கு பஸ்களில், ஒன்று பழுதான நிலையில் இருந்ததால், அதற்கு பதிலாக புதிய பஸ் விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.