/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/முட்டை ஏற்றுமதி அதிகரிக்க விதிமுறை தளர்த்தணும்: மத்திய அரசுக்கு கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கைமுட்டை ஏற்றுமதி அதிகரிக்க விதிமுறை தளர்த்தணும்: மத்திய அரசுக்கு கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை
முட்டை ஏற்றுமதி அதிகரிக்க விதிமுறை தளர்த்தணும்: மத்திய அரசுக்கு கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை
முட்டை ஏற்றுமதி அதிகரிக்க விதிமுறை தளர்த்தணும்: மத்திய அரசுக்கு கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை
முட்டை ஏற்றுமதி அதிகரிக்க விதிமுறை தளர்த்தணும்: மத்திய அரசுக்கு கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை
ADDED : ஜன 27, 2024 03:56 PM
நாமக்கல் : ''முட்டை ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்றால் கடுமையான விதிமுறைகளை, மத்திய அரசு தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் கூறினார்.நாமக்கல் மாவட்டத்தில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பும், முட்டை உற்பத்தியும் பிரதான தொழிலாக விளங்குகிறது.
நாமக்கல் மண்டலத்தில், 1,100 கோழிப்பண்ணைகள் மூலம், தினமும், 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக தினந்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.குறிப்பாக, சவுதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. உக்ரைன், ரஷ்யா போருக்கு பின், ரஷ்யாவில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தி குறைந்ததால், தமிழகத்தில், நாமக்கல்லில் இருந்து செல்லும் முட்டைக்கு தேவை அதிகரித்துள்ளது. இதனால், நாமக்கல்லில் இருந்து ரஷ்யாவுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. முட்டை தேவைக்கேற்ப, நாமக்கல்லில் இருந்து ரஷ்யாவுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) மண்டல தலைவர் சிங்கராஜ் கூறியதாவது:கோழித்தீவனத்திற்கான மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மேலும், வங்கி வட்டி விகிதம், மின்சார கட்டணம், ஆட்கள் சம்பளம், பராமரிப்பு செலவு உயர்ந்துள்ளது. அதன் காரணமாக, முட்டை உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. ஒரு முட்டை, 600 காசுக்கு விற்றால் தான் பண்ணைகளை லாபகரமான முறையில் நடத்த முடியும்.மேலும், துபாய், கத்தார் போன்ற நாடுகளுக்கு, 10 முதல், 15 நாட்களில் முட்டை சென்றடைந்து விடுகிறது. ரஷ்யாவிற்கு செல்ல, 45 நாட்கள் ஆகும். அதனால், அதற்கு உண்டான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில், ரஷ்யா நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். மத்திய கால்நடை பராமரிப்பு துறை, ஏற்றுமதிக்கு தேவையான விதிமுறைகளை கொஞ்சம் தளர்த்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


