/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல்லில் வருவாய்த்துறை சங்கங்கள் காத்திருப்பு போராட்டம் நாமக்கல்லில் வருவாய்த்துறை சங்கங்கள் காத்திருப்பு போராட்டம்
நாமக்கல்லில் வருவாய்த்துறை சங்கங்கள் காத்திருப்பு போராட்டம்
நாமக்கல்லில் வருவாய்த்துறை சங்கங்கள் காத்திருப்பு போராட்டம்
நாமக்கல்லில் வருவாய்த்துறை சங்கங்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : செப் 26, 2025 01:55 AM
நாமக்கல், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்களை முடிவு செய்திட, போதிய கால அவகாசம் கேட்டு, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், நாமக்கல்லில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தன், சரவணன், பரமசிவம், பாலசுப்பிர மணியன், இளங்கோ ஆகியோர் தலைமை வகித்தனர். அதில் வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறையில் பணியாற்றி வரும் அனைத்து நிலையிலான பணியாளர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். போதிய கால அவகாசம் வழங்காமல், பணியில் இலக்கு நிர்ணயித்து நெருக்கடிக்கு உள்ளாக்குவதை தவிர்க்க வேண்டும்.
அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் மனுக்களை முடிவு செய்ய போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்.ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒப்பந்த, தற்காலிக, தொகுப்பூதிய பணியிடங்களை நீக்கி நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஆண்டுதோறும் ஜூலை 1ம் தேதியை 'வருவாய்த்துறை தினமாக' கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.