/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல்லில் நாளை த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம் நாமக்கல்லில் நாளை த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம்
நாமக்கல்லில் நாளை த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம்
நாமக்கல்லில் நாளை த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம்
நாமக்கல்லில் நாளை த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம்
ADDED : செப் 26, 2025 01:54 AM
நாமக்கல் :த.வெ.க., தலைவர் விஜய், நாளை (செப்.,27) நாமக்கல்லில் பிரசாரம் செய்கிறார். அவரது பிரசாரத்திற்காக, த.வெ.க.,வினர். நாமக்கல் பொய்யேரிக்கரை சாலையில் உள்ள மதுரை வீரன் கோவில், பூங்கா சாலை, சேலம் மெயின் ரோட்டில் கே.எஸ்.தியேட்டர் அருகில் என மூன்று இடங்களை தேர்வு செய்தனர். அதிலும், பொய்யேரிக்கரை சாலையில் உள்ள மதுரைவீரன் கோவில் அருகே இடத்தை உறுதி செய்ய வேண்டும் என, த.வெ.க., மாவட்ட நிர்வாகிகள், போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து எஸ்.பி., விமலா ஆலோசனை நடத்தினார். அதில், மதுரைவீரன் கோவில் அருகே உள்ள இடத்திற்கு பதிலாக, மாற்று இடமான சேலம் சாலையில் உள்ள பொன் நகர், 4 தியேட்டர் ஆகிய இரு இடங்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள
அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் த.வெ.க. நிர்வாகிகள் தலைமை நிர்வாகிகளிடம் பேசி விட்டு கூறுவதாக சென்று விட்டனர்.
இந்நிலையில், நேற்று நாமக்கல் வந்த கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், நாமக்கல் எஸ்.பி.,புதுாரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர், சேலம் சாலையில் உள்ள பழைய ஆர்.டி.ஓ., ஆபீஸ், பொய்யேரிக்கரையில் உள்ள மதுரைவீரன் கோவில் பகுதி, பூங்கா சாலை ஆகிய இடங்களை ஆய்வு செய்தார்.
பின் அவர் எஸ்.பி., விமலாவை சந்தித்து, 15 நிமிடம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, வெளியே வந்த பொதுச்செயலர் ஆனந்த் நிருபர்களிடம் கூறுகையில்,'' நாளை (செப்.,27) த.வெ.க., தலைவர் விஜய், நாமக்கல் சேலம் சாலையில் உள்ள கே.எஸ்., தியேட்டர் அருகே காலை, 11:00 மணிக்கு பொதுமக்களை சந்தித்து பிரசாரம் செய்ய உள்ளார்,'' என்றார்.