/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் அச்சம் மக்களுக்கு மாற்றிடத்துடன் வீடு வழங்க திட்டம் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் அச்சம் மக்களுக்கு மாற்றிடத்துடன் வீடு வழங்க திட்டம்
வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் அச்சம் மக்களுக்கு மாற்றிடத்துடன் வீடு வழங்க திட்டம்
வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் அச்சம் மக்களுக்கு மாற்றிடத்துடன் வீடு வழங்க திட்டம்
வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் அச்சம் மக்களுக்கு மாற்றிடத்துடன் வீடு வழங்க திட்டம்
ADDED : ஜூலை 20, 2024 12:44 AM
கூடலுார்:'கூடலுார் கோக்கால் பகுதியில், வீடுகளில் விரிசல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்ளுக்கு மாற்றித்துடன் வீடுகள் கட்டி தரப்படும்' என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
முதுமலை தெப்பக்காடு, மாயாறு, மசினகுடி பகுதியில் மூழ்கிய தரைப்பாலத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். கூடலுார் தொரப்பள்ளி, அரசு பள்ளியில் தங்கியுள்ள இருவயல் கிராம மக்களை சந்தித்து பிரச்னை குறித்து கேட்டறிந்து, நிவாரண உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து, இருவயல் மற்றும் குனில்வயல், மேல்கூடலுார் கோக்கால் பகுதியில் ஒன்றரை சென்ட் குடியிருப்பு பகுதியில், விரிசல் ஏற்பட்ட வீடுகளை ஆய்வு செய்தார்.
அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், 'கூடலுார், பந்தலுார்பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. ஏற்கனவே, நீர்நிலைகள் துார் வாரப்பட்டதால் பருவமழையின் போது பாதிப்புகள் அதிகம் இல்லை. இருவயல் கிராமத்துக்குள் மழை வெள்ளம் வருவதை தடுக்க, மொளப்பள்ளி பகுதியில் ஆறு துார்வரப்படும். கோக்கால் பகுதியில் வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றிடத்துடன், வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்,' என்றார்.