ADDED : ஜூலை 20, 2024 12:44 AM
ஊட்டி;ஊட்டி நகர இந்து முன்னணி செயற்குழு கூட்டம் அலுவலகத்தில் நடந்தது.
மாவட்டத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், 'கோவில்களை மட்டும் சீரழிக்கும் அரசே, ஆலயத்தை விட்டு வெளியேறு' என்ற தலைப்பில், இந்து ஆலயங்கள் அரசின் நிர்வாக சீர்கேடால் சீரழிவதை கண்டித்து, மாநில தழுவிய ஆர்ப்பாட்டம், நாளை (21ம்தேதி) ஊட்டி ஏ.டி.சி., திடலில் நடக்கிறது.இந்த ஆர்ப்பாட்டதில், திரளானோர் பங்கேற்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்ரமணி மற்றும் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சந்தோஷ், செயலாளர் விக்னேஷ், மற்றும் துணை தலைவர் குரு ராகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.