/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மின் நிலைய ராட்சத குழாயில் அடைப்பு கெத்தை மின் நிலைய உற்பத்தியில் பாதிப்பு மின் நிலைய ராட்சத குழாயில் அடைப்பு கெத்தை மின் நிலைய உற்பத்தியில் பாதிப்பு
மின் நிலைய ராட்சத குழாயில் அடைப்பு கெத்தை மின் நிலைய உற்பத்தியில் பாதிப்பு
மின் நிலைய ராட்சத குழாயில் அடைப்பு கெத்தை மின் நிலைய உற்பத்தியில் பாதிப்பு
மின் நிலைய ராட்சத குழாயில் அடைப்பு கெத்தை மின் நிலைய உற்பத்தியில் பாதிப்பு
ADDED : ஜூன் 25, 2024 01:18 AM
ஊட்டி:கெத்தை மின் நிலையத்துக்கு செல்லும் ராட்சத குழாயில் அடைப்பால் மின் உற்பத்தி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர்மின்திட்டத்தின் கீழ், குந்தா, கெத்தை, பில்லுார், அவலாஞ்சி, காட்டுகுப்பை, பைக்காரா, மசினகுடி உள்ளிட்ட,12 மின் நிலையங்கள், 13 அணைகள் உள்ளன.
இந்த மின் நிலையங்கள் மூலம் தினசரி, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். அதில், குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட குந்தா அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் கெத்தை, பரளி, பில்லுார் ஆகிய மின் நிலையங்களில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
குந்தா அணை முக்கிய அணையாக கருதப்படும் நிலையில், அணையின் மொத்த அடியான, 89 அடியில் பாதி அளவுக்கு சகதி நிறைந்துள்ளது. கெத்தை மின் நிலையத்தில் 'பீக் ஹவர்ஸ்' மின் உற்பத்திக்காக குந்தா அணையிலிருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
குந்தா அணையில் இருந்து கெத்தை அணைக்கு செல்லும் ராட்சத குழாயில் சகதி அதிகரித்தது தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த சகதியால் மின் உதிரி பாகங்களும் அடிக்கடி பழுதாகி வருகிறது.
மின்வாரிய உயர் அதிகாரிகள் குந்தா அணையை விரைவில் ஆய்வு மேற்கொண்டு சகதியை அகற்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் கெத்தை, பரளி, பில்லுார் ஆகிய மின் நிலையங்களில் தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.