/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஏழு மாதத்தில் இடிந்து விழுந்த தடுப்பணை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் ஏழு மாதத்தில் இடிந்து விழுந்த தடுப்பணை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஏழு மாதத்தில் இடிந்து விழுந்த தடுப்பணை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஏழு மாதத்தில் இடிந்து விழுந்த தடுப்பணை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஏழு மாதத்தில் இடிந்து விழுந்த தடுப்பணை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 25, 2024 01:29 AM

பந்தலுார்;கூடலுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிதர்காடு அருகே, பாலாப்பள்ளி என்ற இடத்தில் நீரோடையின் குறுக்கே கட்டிய தடுப்பணை, 7 மாதத்தில் இடிந்தது குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டு உள்ளது.
பந்தலுார் பிதர்காடு அருகே பாலாப்பள்ளி என்ற இடத்தில் பழங்குடியின குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் நீரோடை செல்கிறது. பிதர்காடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் மற்றும் மழை நீர், இந்த நீரோடையில் அதிக அளவில் செல்கிறது. மழை காலங்களில் நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இந்தப் பகுதி மக்கள் வெளியே நடமாட முடியாத நிலையில் சிரமப்பட்டு வரும் நிலை தொடர்கிறது.
அதேவேளையில்,கோடைகாலத்தில் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் கூடலுார் ஊராட்சி ஒன்றியம் மூலம், 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் தடுப்பணை அமைக்கப்பட்டது. நெலக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் மூலம் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் தடுப்பணை கட்டப்பட்டது.
போதிய தரம் இல்லாமல் கட்டப்பட்ட தடுப்பணை, சமீபத்தில் பெய்த மழையின்போது முழுமையாக இடிந்தது. இதனால், நடப்பாண்டு பருவ மழையில் தண்ணீர் முழுமையாக வெளியேறி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது.
மக்கள் கூறுகையில், 'இது குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற முறையில் தடுப்பணை கட்டிய ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்த வேண்டும். அவரிடமிருந்து நிதியை திரும்ப பெற்று புதிய தடுப்பணை கட்ட வேண்டும்,' என்றனர்.