/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குன்னுாரில் விரட்டி கடிக்கும் நாய்கள் மக்கள் நடமாட அச்சம் குன்னுாரில் விரட்டி கடிக்கும் நாய்கள் மக்கள் நடமாட அச்சம்
குன்னுாரில் விரட்டி கடிக்கும் நாய்கள் மக்கள் நடமாட அச்சம்
குன்னுாரில் விரட்டி கடிக்கும் நாய்கள் மக்கள் நடமாட அச்சம்
குன்னுாரில் விரட்டி கடிக்கும் நாய்கள் மக்கள் நடமாட அச்சம்
ADDED : ஜூன் 25, 2024 08:43 PM
குன்னுார்:குன்னுாரில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர்.
குன்னுார் நகரில் சமீப காலமாக தெரு நாய்கள் அதிகரித்துள்ளது. பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், மவுண்ட்ரோடு. சிம்ஸ்பார்க் உட்பட பல இடங்களிலும் உலா வருகிறது.
சில நேரங்களில் கூட்டமாக வந்து செல்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் தனியாக வருபவர்களை விரட்டி வருகிறது. இதனால், மாணவ, மாணவியர் உட்பட மக்கள் நடமாட அச்சமடைந்துள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'காலேஜ் ரோடு பகுதியில் உலா வரும் நாய்கள் பள்ளி மாணவ, மாணவிகளை விரட்டுகிறது. கிராஸ் பஜார் மவுண்ட் ரோடு பகுதிகளில் இரவு, 11:00 மணிக்கு வருபவர்களை நாய்கள் கடிக்கிறது. பல முறை நகராட்சியில் புகார்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தெருநாய்களை பிடித்து புளூகிராஸ் நிர்வாகிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.