/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குன்னுாரில் இசை, நடனம் கலாசார நிகழ்ச்சி அசத்தல் குன்னுாரில் இசை, நடனம் கலாசார நிகழ்ச்சி அசத்தல்
குன்னுாரில் இசை, நடனம் கலாசார நிகழ்ச்சி அசத்தல்
குன்னுாரில் இசை, நடனம் கலாசார நிகழ்ச்சி அசத்தல்
குன்னுாரில் இசை, நடனம் கலாசார நிகழ்ச்சி அசத்தல்
ADDED : ஜூன் 20, 2025 06:32 AM

குன்னுார் : நீலகிரி கேந்திரா பாரதிய வித்யாபவன் சார்பில் குன்னுாரில் நடந்த, 19வது இசை மற்றும் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
குன்னுாரில், நீலகிரி கேந்திரா, பாரதிய வித்யாபவன் சார்பில், 19வது இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடந்தது. முதல் நாளன்று, நீலகிரியில், மறைந்த முன்னாள் அணு ஆராய்ச்சி கழக தலைவரும், பாரதிய கேந்திரிய வித்யா பவன் தலைவருமான பத்ம விபூஷன் டாக்டர் சீனிவாசன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, அமிர்தா முரளியின் கர்நாடக சங்கீத நிகழ்ச்சி நடந்தது. அதில், ஸ்ரீராம் குமாரின் வயலின், டில்லி சாய்ராமின் மிருதங்கம் இடம்பெற்றது.
'விநாயகா' தமிழ் பாடலுடன் தொடங்கி, தியாகராஜர், ஷ்யாமா சாஸ்திரி, தீக்ஷிதர் பாடல்களை பாடினார். பாரதியார் எழுதிய பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் மற்றும் மராத்தி அபங் ஆகியவற்றையும் அருமையாக பாடினார்.
இரண்டாம்நாள் நிகழ்ச்சியில் பெங்களூருவை சேர்ந்த கதக் நடன தம்பதியினர் ஹரி, சேத்தனா மற்றும் மாணவ மாணவியரின் கதக் நடன நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
அதில், கணேச வந்தனம், சர்கம், தாளமாலா, சிவாஞ்சலி என பல பாடல்களுக்கு நடனம் ஆடினர்.
மூன்றாவது நாள் மற்றும் கடைசி நாள் நிகழ்ச்சியில், ஹரிணி ஜீவிதா பரதநாட்டியம் நடந்தது. சாரதாம்பாள் துதியில் துவங்கி மயிலை கபாலீஸ்வரர் மீதான வர்ணம் அஷ்டபதி சுத்தநத்தம் என்ற பாடல்களுக்கு நடனம் ஆடினார் சுதா நிறுத்தம் மிருதங்கம் மற்றும் அவரது பாத சலங்கை ஒலியுடன் நடனம் ஆடியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
நிறைவாக, மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நீலகிரி கேந்திராவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் பற்றி பாராட்டி பேசினார். ஏற்பாடுகளை நீலகிரி கேந்திரா பாரதிய வித்யா பவன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.