/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தவறவிட்ட மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார் தவறவிட்ட மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்
தவறவிட்ட மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்
தவறவிட்ட மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்
தவறவிட்ட மொபைல் போன் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்
ADDED : ஜூன் 20, 2025 06:32 AM
குன்னுார் : குன்னுாரில் தவற விட்ட மொபைல் போனை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
குன்னுார் சிறப்பு எஸ்.ஐ., பாபு, மற்றும் டிரைவர் ஷானு ஆகியோர் ஹைவே பட்ரோல் வாகனத்தில் ரோந்து வந்தனர். போலீஸ் ஸ்டேஷன் சென்று கொண்டிருந்த போது ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே சாலையில் மொபைல்போன் கிடந்தது கண்டெடுத்தனர்.
அப்போது, போன் உரிமையாளரான உலிக்கல் பேரூராட்சி ஊழியர் ரகு மற்றொரு மொபைலில் இருந்து அழைத்துள்ளார். நேரில் வரவழைத்து, விசாரித்து, 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் அவரதுதான் என்பதை உறுதி செய்த பிறகு ஒப்படைத்தனர். போலீசாருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.