/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கள ஆய்வில் பெறப்பட்ட மனுக்களில் 80 சதவீதத்திற்கு தீர்வு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தகவல் கள ஆய்வில் பெறப்பட்ட மனுக்களில் 80 சதவீதத்திற்கு தீர்வு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தகவல்
கள ஆய்வில் பெறப்பட்ட மனுக்களில் 80 சதவீதத்திற்கு தீர்வு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தகவல்
கள ஆய்வில் பெறப்பட்ட மனுக்களில் 80 சதவீதத்திற்கு தீர்வு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தகவல்
கள ஆய்வில் பெறப்பட்ட மனுக்களில் 80 சதவீதத்திற்கு தீர்வு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தகவல்
ADDED : செப் 24, 2025 11:51 PM
ஊட்டி: ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் சிறுபான்மையினர் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண், 'நீலகிரி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்; உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்; உலாமா பணியாளர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாக னம் வாங்க மானியம்; சிறுபான்மையின மாணவிகளுக்கான கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை,' என்பன உட்பட பல திட்ட செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். பின், சிறுபான்மையினர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
அதன்பின், ஆணைய தலைவர் அருண் நிருபர்களிடம் கூறுகையில், ''மாநிலத்தில் உள்ள, 32 மாவட்டங்களில் ஆணையத்தின் குழுவானது கள ஆய்வு செய்ததில் பெறப்பட்ட கோரிக்கைகளில், 80 சதவீதம் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நீலகிரியில் நடந்த கலந்தாய்வில், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் கல்லறை தோட்டத்துக்கு தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும், தர்கா மற்றும் பள்ளிவாசல்களை புனரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன.
சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டு சில கோரிக்கைகள் மீது உடனே தீர்வு காணப்பட்டது,'' என்றார். கூட்டத்தில், கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி. நிஷா, கூடுதல் கலெக்டர் அபிலாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.