ADDED : செப் 25, 2025 11:27 PM
கோத்தகிரி; கோத்தகிரி அரசு மருத்துவமனை சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதில், 'விபத்து மற்றும் அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் புற்றுநோயாளிகள் பிரிவு,' என, விரிவு படுத்தப்பட்டது. தற்போது, மருத்துவமனை கீழ்பகுதியில், பழைய கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்ட, பல்வேறு பிரிவுகளுக்கான கூடுதலாக கட்டும் பணி நடந்து வருகிறது. மருத்துவமனையை, நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனை நுழைவு வாயிலில், தடுப்புச்சுவர் முழுமை பெறாமல் உள்ளது. தற்காலிகமாக, தகரத்தில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், நாய்கள் உள்ளே செல்வது தொடர்கிறது. பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே, தடுப்புச்சுவரை அமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்