/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்த காட்டு யானை; ரசித்து சென்ற சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்த காட்டு யானை; ரசித்து சென்ற சுற்றுலா பயணிகள்
ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்த காட்டு யானை; ரசித்து சென்ற சுற்றுலா பயணிகள்
ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்த காட்டு யானை; ரசித்து சென்ற சுற்றுலா பயணிகள்
ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்த காட்டு யானை; ரசித்து சென்ற சுற்றுலா பயணிகள்
UPDATED : செப் 23, 2025 10:56 PM
ADDED : செப் 23, 2025 09:03 PM

கூடலுார், ; கூடலுார் அருகே, கோழிக்கோடு சாலையோரம், ஆற்றில் காட்டு யானை தண்ணீர் குடித்ததை சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர்.
கூடலுார், ஓவேலி, குண்டம்புழா வனப்பகுதியில் இருந்து, சில காட்டு யானைகள் இரவில் பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டம் வழியாக, கோழிக்கோடு சாலையை கடந்த, பால்மேடு, புளியம்பாறை, மரப்பாலம், ஆமைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில், நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர், கண்காணித்து தடுத்து விரட்டினாலும், ஊருக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், இரும்புபாலம் அருகே, கோழிக்கோடு சாலையை ஒட்டி செல்லும், புளியாம்பாறை ஆற்றில், நேற்று முன்தினம் மாலை யானை திடீரென ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது.
அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் அதனை ஆர்வமாக ரசித்து சென்றனர். சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து சென்றது.
இதே யானை இரவு, புளியம்பாறை மரபாலம் பகுதிகளில் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. வன ஊழியர்கள் விரட்டியும் நகரவில்லை. அதிகாலை, பால்மேடு அருகே, சாலையை கடந்து வனப்பகுதிக்கு சென்றது. தொடரும் இச்சம்பத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'தொடர்ந்து இப்பகுதிக்கு இரவில் நுழைந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களுக்கு அச்சுறுத்தி வரும் காட்டு யானை, மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளது. முன்னெச்சரிக்கையாக இதனை தடுக்க, வனத்துறையினர் நடவடிக்கை தீர்வு காண வேண்டும்,' என்றனர்.