/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நுழைவு கட்டணம் செலுத்தியும் சாலை மோசம்; தமிழக-கேரள சாலையில் வரும் பயணிகள் அதிருப்தி நுழைவு கட்டணம் செலுத்தியும் சாலை மோசம்; தமிழக-கேரள சாலையில் வரும் பயணிகள் அதிருப்தி
நுழைவு கட்டணம் செலுத்தியும் சாலை மோசம்; தமிழக-கேரள சாலையில் வரும் பயணிகள் அதிருப்தி
நுழைவு கட்டணம் செலுத்தியும் சாலை மோசம்; தமிழக-கேரள சாலையில் வரும் பயணிகள் அதிருப்தி
நுழைவு கட்டணம் செலுத்தியும் சாலை மோசம்; தமிழக-கேரள சாலையில் வரும் பயணிகள் அதிருப்தி
UPDATED : செப் 23, 2025 10:58 PM
ADDED : செப் 23, 2025 09:01 PM

கூடலுார், ; 'கூடலுார்-நாடுகாணி இடையே சாலை சேதமடைந்து, சீரமைக்கததால், நுழைவு கட்டணம் செலுத்தியும் சாலையில் பயணிக்க முடியவில்லை,' என, சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கேரளாவிலிருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு, கூடலுார் நாடுகாணி பகுதியில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாடுகாணி முதல் தமிழக கேரளா எல்லையான கீழ்நாடுகாணி வரையிலான, 6 கி.மீ., சாலையும், கூடலுார் - - செம்பாலா வரையிலான, 2 கி.மீ., சாலையில் பல இடங்களில் மிக மோசமாக சேதமடைந்துள்ளது.
இப்பகுதிகளில், நெடுஞ்சாலை துறையினர் அவ்வப்போது மண் கலந்த ஜல்லி கற்களை நிரப்பி தற்காலிகமாக மட்டுமே சீரமைத்து வருகின்றனர். மழை வந்தால் மீண்டும் சேதம் ஏற்படுகிறது. சேதமடைந்த பகுதிகளை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், 'நுழைவு கட்டணம் செலுத்தியும் வாகனங்களில் பயணிக்க முடியவில்லை,' என, சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந் துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'சேதமடைந்த இப்பகுதி சாலை சீரமைக்க அரசு, 7.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாகவும், பணிகள் விரைவில் துவங்கப்படும், என, அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், சேதமடைந்துள்ள பகுதிகளை கூட தரமாக சீரமைக்க நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு, முதல் கட்டமாக சேதமடைந்த பகுதிகளை, தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.