ADDED : செப் 23, 2025 08:58 PM
ஊட்டி; ஊட்டி அருகே கள்ளச்சாராய வழக்கில் தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி அருகே கோக்கால் பகுதியில் கடந்த, 2020ம் ஆண்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக துாபகண்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கோக்கால் பகுதியை சேர்ந்த நாகராஜ், கன்னேரிமுக்கு பகுதியை சேர்ந்த ஜெயராமன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின், மூன்று பேரும் ஜாமினில் வந்தனர்.
ஒரு சில மாதங்கள் வழக்கு சம்பந்தமாக கோர்ட்டில் ஆஜராகி வந்தனர். கடந்த ஆறு மாத காலமாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர். சம்பந்தப்பட்ட நபர்களைப் பிடிக்க கோர்ட் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தது.
புதுமந்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ., பிரசாத் தலைமையிலான போலீசார் சோலுார் பகுதியில் தலைமறைவாக இருந்த நாகராஜ்,45, ஜெயராமன்,48, ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.