/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
ADDED : செப் 23, 2025 08:59 PM

பந்தலுார், ;பந்தலுார் அருகே கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'ஆல் தி சில்ட்ரன்' அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத மருத்துவர் பூஜா, மருந்தாளுனர் லிடியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை வகித்து டாக்டர் ஜனார்த்தனன் பேசுகையில், ''அரசு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகத்துடன், சில அறக்கட்டளைகள் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்குகின்றன. இதனால், எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை குறைகிறது. கடந்த, 5 ஆண்டுகளில் ஒரு குழந்தை இறப்பு கூட ஏற்படவில்லை. தாய்மார்கள் ஊட்டச்சத்து உணவுகளை முறையாக எடுத்துகொள்ள வேண்டும்,'' என்றார்.
கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் பேசுகையில், ''கர்ப்பிணிகள் கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்த்து கீரைகள், பழங்கள், சிறுதானிய உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். ரத்தசோகை குறைபாட்டை தவிர்க்க, இரும்புச்சத்து அதிகம் உள்ள முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, வெல்லம் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ளுதல் அவசியம். தினசரி, 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம்,'' என்றார். 'ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் உட்பட பலர் பேசினர். தொடர்ந்து, 20 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.