/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் மாவட்டத்தில் 49 குழந்தை திருமணங்கள்.. தடுத்து நிறுத்தம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 49 குழந்தை திருமணங்கள்.. தடுத்து நிறுத்தம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 49 குழந்தை திருமணங்கள்.. தடுத்து நிறுத்தம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 49 குழந்தை திருமணங்கள்.. தடுத்து நிறுத்தம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 49 குழந்தை திருமணங்கள்.. தடுத்து நிறுத்தம்
ADDED : ஜூலை 16, 2024 05:43 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024 ஜன., முதல் இதுவரை 49 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 5 குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து குழந்தை திருமணங்கள் அதிகரிக்க போதிய விழிப்புணர்வு ஏற்படாததே காரணம்.
மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், சமூக நலத்துறை, ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து குழந்தைகள் திருமணம் நடக்கமால் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாதத்தில் சராசரியாக 10 குழந்தை திருமணங்கள் குறித்த புகாரின் பேரில் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
நடப்பு 2024ல் ஜன., முதல் இதுவரை 54 குழந்தை திருமணங்கள் குறித்த புகார்கள் பெறப்பட்டன. இதில் 43 குழந்தை திருமணங்கள் நடப்பதற்கு முன்பே நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 6 குழந்தை திருமணங்கள் வெளி மாவட்டங்கள் என்பதால் அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
ஐந்து குழந்தை திருமணங்கள் நடந்து முடிந்து விட்டதால் திருமணம் செய்து வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் கூறியதாவது:
மாவட்டத்தில் 48 திருமணங்கள் நிறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். 5 குழந்தை திருமணங்கள் நடந்து முடிந்து விட்டதால் போலீசார் இந்த திருமணங்களை நடத்தி வைத்த பெற்றோர், உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாதத்திற்கு தலா 10 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. முதுகுளத்துார், கமுதி, மண்டபம், ராமநாதபுரம் பகுதிகளில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடத்த முயற்சிக்கின்றனர். தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
விழிப்புணர்வுக்காக 500 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 500 தன்னார்வலர்கள் பள்ளி, கல்லுாரிகளில் இருந்து நியமிக்கப்படவுள்ளனர். அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட அனைவரும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்றார்.
*போதிய விழிப்புணர்வு இல்லை:
இருப்பினும் மாவட்ட மக்களிடம் குழந்தை திருமணம் பாதிப்பு, சட்டம் குறித்து இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லாததே ஆண்டு தோறும் குழந்தை திருமணங்கள் அதிகரிக்க காரணம். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் கூடுதல் கவனம் செலுத்தி கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
---