/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தேர்தல் பணி ஊக்கத்தொகை தரல திருவாடானை போலீசார் புலம்பல் தேர்தல் பணி ஊக்கத்தொகை தரல திருவாடானை போலீசார் புலம்பல்
தேர்தல் பணி ஊக்கத்தொகை தரல திருவாடானை போலீசார் புலம்பல்
தேர்தல் பணி ஊக்கத்தொகை தரல திருவாடானை போலீசார் புலம்பல்
தேர்தல் பணி ஊக்கத்தொகை தரல திருவாடானை போலீசார் புலம்பல்
ADDED : ஜூலை 16, 2024 05:37 AM
திருவாடானை : தேர்தல் பணிக்கான ஊக்கத்தொகை இதுவரை கிடைக்கவில்லை என திருவாடானை போலீசார் புலம்புகின்றனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்.19 ல் நடந்தது. ஜூன் 4 ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. புதிய அரசு பதவி ஏற்பு விழாவும் முடிந்து விட்டது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் போலீசாருக்கு தேர்தல் பணியாக கருதப்பட்டது. தேர்தல் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை, கண்காணிப்பு குழு, ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பு பணி, புள்ளி விபரங்கள் சேகரித்தல் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர்.
அதன்படி திருவாடானை சப்-டிவிஷனில் உள்ள திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி ஆகிய போலீஸ்ஸ்டேஷன்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஊக்கத் தொகை வழங்குகிறது. அந்த வகையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வருவாய்த்துறையினர், ஆசிரியர்களுக்கு அப்போதே ஊக்கத் தொகை கொடுக்கப்பட்டது.
ஆனால் தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியும், இதுவரை போலீசாருக்கு ஊக்கத்தொகை வழங்கவில்லை. இவர்களுடன் தேர்தல் பணியில் ஈடுபட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு தேர்தல் ஊக்கத்தொகை வழங்கபட்ட நிலையில் தங்களுக்கு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் போலீசார் புலம்புகின்றனர்.