/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மண்டபம் ரயில் நிலையத்தில் ஆந்திர மாநில சிறுவன் மீட்பு மண்டபம் ரயில் நிலையத்தில் ஆந்திர மாநில சிறுவன் மீட்பு
மண்டபம் ரயில் நிலையத்தில் ஆந்திர மாநில சிறுவன் மீட்பு
மண்டபம் ரயில் நிலையத்தில் ஆந்திர மாநில சிறுவன் மீட்பு
மண்டபம் ரயில் நிலையத்தில் ஆந்திர மாநில சிறுவன் மீட்பு
ADDED : ஜூன் 16, 2024 04:45 AM
ராமநாதபுரம்: மண்டபம் ரயில் நிலையில் ஆதரவற்ற நிலையில் இருந்த ஆந்திர மாநில சிறுவனை குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் மீட்டு காரைக்குடி அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
மண்டபம் ரயில் நிலையில் ஆதரவற்ற நிலையில் 13 வயது சிறுவன் அலைந்து கொண்டிருந்தான். இவரை ரயில் நிலையத்தில் பணியில் இருந்த குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் மீட்டனர்.
இந்த சிறுவன் தெலுங்கு பேசுகிறார். யார், எந்த ஊரை சேர்ந்தவர், இவரதுபெற்றோர் யார், எப்படி மண்டபம் பகுதிக்கு வந்தார் என்பது தெரியவில்லை.
மீட்கப்பட்ட சிறுவனிடம் குழந்தைகள் நலப்பாதுகாப்பு குழு, குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தினர் விசாரித்தனர். தெலுங்கு மொழி தெரிந்தவர்களை வைத்து சிறுவன் விபரங்களை சேகரிக்க முயற்சித்தனர். சிறுவன் ஆந்திர மாநிலம் நெல்லுார் என்பதை மட்டும் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்.
பெற்றோர் விபரங்கள் தெரியவில்லை. இவரை காரைக்குடியில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர். ஆந்திர மாநில குழந்தைகள் பாதுகாப்பு குழு மூலம் சிறுவன் புகைப்படத்தை வைத்து அவரது விபரங்களை சேகரிக்க அறிவுறுத்தியுள்ளனர்.