/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சாயல்குடி சந்தையில் பிளாஸ்டிக் அதிகரிப்பு சாயல்குடி சந்தையில் பிளாஸ்டிக் அதிகரிப்பு
சாயல்குடி சந்தையில் பிளாஸ்டிக் அதிகரிப்பு
சாயல்குடி சந்தையில் பிளாஸ்டிக் அதிகரிப்பு
சாயல்குடி சந்தையில் பிளாஸ்டிக் அதிகரிப்பு
ADDED : ஜூன் 16, 2024 04:44 AM
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி பகுதியில் சனிக்கிழமை தோறும் நடக்கும் வாரச் சந்தையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
கடலாடியில் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடக்கிறது.
தரை உள்ளிட்ட விரிப்பு கடைகளில் காய்கறி, மளிகை, பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்கின்றனர். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொருட்களை வாங்குவதற்காக வரும் பொதுமக்களுக்கு பார்சலாக பிளாஸ்டிக் பை வழங்கப்படுகிறது.
இதேபோல் ஓட்டல், டீக்கடைகளில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வாழை இலைகளுக்கு பதில் பிளாஸ்டிக் தாள்களில் உணவு பரிமாறப்படுகிறது. டீக்கடைகளில் பார்சலாக பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துகின்றனர்.
எனவே மண்ணிற்குள் மக்காமல் கேடு விளைவிக்கக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.