/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உடலுறுப்பு தானம் வலியுறுத்தி விழிப்புணர்வு மெல்லோட்டம் உடலுறுப்பு தானம் வலியுறுத்தி விழிப்புணர்வு மெல்லோட்டம்
உடலுறுப்பு தானம் வலியுறுத்தி விழிப்புணர்வு மெல்லோட்டம்
உடலுறுப்பு தானம் வலியுறுத்தி விழிப்புணர்வு மெல்லோட்டம்
உடலுறுப்பு தானம் வலியுறுத்தி விழிப்புணர்வு மெல்லோட்டம்
ADDED : ஜூலை 29, 2024 10:41 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் உடலுறுப்பு தானம் வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் மெல்லோட்டம் நடத்தினர்.
உடலுறுப்பு தானம் தினம் ஆக.3ல் கடைப் பிடிக்கப்படுகிறது. இதனை வலியுறுத்தி ராமநாதபுரம் தலைமை அஞ்சலக அலுவலகம் முன்பிருந்து ஊழியர்கள், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மெல்லோட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் செந்தில்குமார் தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தீர்த்தாரப்பன் முன்னிலை வகித்தார். உதவி கண்காணிப்பாளர் சுப்பையா, அஞ்சலக கோட்ட ஆய்வாளர் சரத், ராமநாதபுரம் தலைமை அஞ்சலக அதிகாரி ேஷக் தாவூத் உட்பட பலர் பங்கேற்றனர்.
மெல்லோட்டம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. அங்கு உடலுறுப்பு தானம் குறித்த உறுதிமொழி எடுத்தனர்.