Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஓடும் பஸ்சில் முதியவருக்கு டீயில் மயக்க மருந்து கொடுத்து வழிப்பறி மயங்கியவரை காப்பாற்றிய நர்ஸ்

ஓடும் பஸ்சில் முதியவருக்கு டீயில் மயக்க மருந்து கொடுத்து வழிப்பறி மயங்கியவரை காப்பாற்றிய நர்ஸ்

ஓடும் பஸ்சில் முதியவருக்கு டீயில் மயக்க மருந்து கொடுத்து வழிப்பறி மயங்கியவரை காப்பாற்றிய நர்ஸ்

ஓடும் பஸ்சில் முதியவருக்கு டீயில் மயக்க மருந்து கொடுத்து வழிப்பறி மயங்கியவரை காப்பாற்றிய நர்ஸ்

ADDED : ஜூலை 29, 2024 10:58 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே டீயில் மயக்க மருந்து கொடுத்து முதியவரிடம் வழிப்பறி செய்யப்பட்டது. முதியவரை மீட்டு நர்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினார்.

முதுகுளத்துார் அருகே புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல் 72. இவர் கோவை சென்றுவிட்டு நேற்று முன்தினம் காலை ஊர் திரும்பினார். மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டிலிருந்து முதுகுளத்துார் செல்வதற்காக பரமக்குடி வந்த அரசு பஸ்சில் ஏறியுள்ளார்.

அருகில் மொட்டை போட்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் மைக்கேலிடம் பழகினார். பஸ் புறப்படுவதற்கு முன் டீ குடித்து விட்டு வருவதாக சென்றவர் வரும் போது மைக்கேலுக்கும் டீ வாங்கி வந்து கொடுத்துள்ளார்.

அதில் மயக்கமருத்து கலந்திருந்ததால் மைக்கேல் மயங்கினார். அவர் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரம், ஜப்பான் கடிகாரத்தை பறித்துவிட்டு கண்டக்டரிடம் அவர் எனது தந்தை. அவரை பரமக்குடியில் இறக்கி விடுங்கள் என்று கூறிவிட்டு இறங்கி சென்று விட்டார்.

மயங்கிய நிலையில் மைக்கேல் பஸ்சில் வாந்தி எடுத்துள்ளார். பஸ்சில் இருந்தவர்கள் போதையில் வாந்தி எடுக்கிறார் என கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர். மானாமதுரையில் பஸ் ஏறிய இருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் விசாலாட்சி சென்று பார்த்த போது முதியவர் போதையில் இல்லை என தெரிய வந்தது. அவர் பஸ் சீட்டில் இருந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக பஸ்சை ராமநாதபுரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்குள் விடுமாறு விசாலாட்சி கேட்டுக்கொண்டார். அங்கு சிகிச்சைக்கு பின் சுய நினைவிற்கு வந்த மைக்கேல் மயக்க மருந்து கொடுத்து ஏமாற்றப்பட்டதையும், தனது மோதிரம், கடிகாரத்தை பறித்து சென்றதையும் தெரிவித்தார். ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

விசாலாட்சி கூறியதாவது: உயிர் காக்கும் மருத்துவம் படித்துள்ளோம். முதியவரை பரிசோதித்தேன். அவர் மயக்க மடைந்து சோர்வாக இருந்ததால் நெஞ்சு வலி வந்திருக்குமோ என சந்தேகித்தேன். மருத்துவமனைக்கு வந்த பிறகு தான் அவருக்கு மயக்க மருந்து கொடுத்தது தெரிய வந்தது. அவரை காப்பாற்றியது மகிழ்சியாக உள்ளது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us