/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாகிறது கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாகிறது
கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாகிறது
கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாகிறது
கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாகிறது
ADDED : ஜூலை 31, 2024 04:38 AM
திருவாடானை, : கூட்டுறவுத்துறையில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
கூட்டுறவு சங்கங்களில் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் முழுமையாக கணினி மயமாக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு அரசு அறிவித்தது.
ஆனால் அதற்கான பணிகள் மந்தமாகவே இருந்தது. இந்நிலையில் டிச.,க்குள் பணிகள் முடிந்து 2025 ஜன., முதல் முழுமையாக கணினி மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கூட்டுறவு அலுவலர்கள் கூறியதாவது:
பெரும்பாலான சங்கங்கள் இதுவரை முழுமையான முறையில் கணினிமயமாக்கப்படவில்லை. தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கணினி மயமாக்கல் மூலம் கூட்டுறவு சங்கங்களின் நிதி சேர்க்கை, விவசாயிகளுக்கு சேவையை வலுப்படுத்துதல் மற்றும் உரங்கள், விதைகள், போன்ற இடு பொருட்கள் வழங்குவது முக்கிய சேவை மையங்களாக மாற்றும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடன்களை விரைவாக செலுத்துதல், தணிக்கை, பணம் செலுத்துதல் போன்ற பணிகளும் நடைமுறைப்படுத்த இருப்பதால் வங்கி போல் செயல்படும்.
அலுவலர்களுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. டிச.,க்குள் பணிகள் முடிந்து 2025 ஜன., முதல் அனைத்து கூட்டுறவு சங்கங்களும் முழுமையாக கணினிமயமாக்கப்படும் என்றனர்.