/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசுப்பள்ளி மாணவருக்கு ரொக்கப்பரிசு வழங்கல் அரசுப்பள்ளி மாணவருக்கு ரொக்கப்பரிசு வழங்கல்
அரசுப்பள்ளி மாணவருக்கு ரொக்கப்பரிசு வழங்கல்
அரசுப்பள்ளி மாணவருக்கு ரொக்கப்பரிசு வழங்கல்
அரசுப்பள்ளி மாணவருக்கு ரொக்கப்பரிசு வழங்கல்
ADDED : ஜூலை 31, 2024 04:37 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே தினைக்குளம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு தொலைத்தொடர்பு கணக்குப்பிரிவு நல அறக்கட்டளை சார்பில் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.
தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற எஸ்.நஸ்ரின்பேகம், இரண்டாம் இடம் பெற்ற பி.சுபிட்ஷா, மூன்றாம் இடம் பிடித்த ஜே.நசீமாபாத்திமா ஆகியோருக்கு பாராட்டு விழா நடந்தது.
தலைமையாசிரியர் டேவிட் மோசஸ் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
தமிழ்நாடு தொலைத்தொடர்பு கணக்குப்பிரிவு நல அறக்கட்டளை பொறுப்பாளர் அங்குசாமி ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.
ஆசிரியர் மணிமொழி நன்றி கூறினார். ஆசிரியர் மணிவண்ணன் ஒருங்கிணைத்தார். அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.