/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மறு முத்திரையிடாத தராசுகள் பறிமுதல் மறு முத்திரையிடாத தராசுகள் பறிமுதல்
மறு முத்திரையிடாத தராசுகள் பறிமுதல்
மறு முத்திரையிடாத தராசுகள் பறிமுதல்
மறு முத்திரையிடாத தராசுகள் பறிமுதல்
ADDED : ஜூலை 16, 2024 05:50 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வில் மறு முத்திரையிடாமல் பயன்படுத்திய தராசுகள் உட்பட 60 எடை அளவைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி தலைமையில் நகரில் உள்ள காய்கறி கடைகள், பழக்கடைகள், கறிக்கடைகள், மீன்கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது மறுமுத்திரை இல்லாமல் பயன்படுத்திய 25 மின்னணு தராசுகள், 24 எடை கற்கள், 5 விட்ட தராசுகள், 5 மேஜை தராசுகளை பறிமுதல் செய்தனர்.
எதிர் வரும் காலங்களில் மறுமுத்திரை இல்லாமல் பயன்படுத்தினால் எடையளவுச் சட்டம் 2009ன் படி ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.