/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கன்னிராஜபுரத்தில் காமராஜர் பிறந்த நாள் கன்னிராஜபுரத்தில் காமராஜர் பிறந்த நாள்
கன்னிராஜபுரத்தில் காமராஜர் பிறந்த நாள்
கன்னிராஜபுரத்தில் காமராஜர் பிறந்த நாள்
கன்னிராஜபுரத்தில் காமராஜர் பிறந்த நாள்
ADDED : ஜூலை 16, 2024 05:50 AM
சாயல்குடி,: -சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் 122 வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காமராஜரின் திருவுருவச் சிலைக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கன்னிராஜபுரம் சத்திரிய ஹிந்து நாடார் உறவின்முறை காமராஜர் நற்பணி இயக்கம், நரிப்பையூர் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மூன்றாம் ஆண்டு ரத்ததான முகாம் நடத்தினர்.
இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர். பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. காமராஜர் நற்பணி இயக்கத்தின் சார்பில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டது.
ஏற்பாடுகளை கன்னிராஜபுரம் காமராஜர் நற்பணி இயக்கத்தினர் செய்திருந்தனர்.