/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு அலுவலக திறப்பு விழாவில் பட்டாசு வெடித்த தி.மு.க.,வினர் அரசு அலுவலக திறப்பு விழாவில் பட்டாசு வெடித்த தி.மு.க.,வினர்
அரசு அலுவலக திறப்பு விழாவில் பட்டாசு வெடித்த தி.மு.க.,வினர்
அரசு அலுவலக திறப்பு விழாவில் பட்டாசு வெடித்த தி.மு.க.,வினர்
அரசு அலுவலக திறப்பு விழாவில் பட்டாசு வெடித்த தி.மு.க.,வினர்
ADDED : ஜூலை 29, 2024 10:37 PM

ராமநாதபுரம் : முதல்வர் ஸ்டாலின் அரசு விழாக்களை எளிமையாக நடத்த வேண்டும் என வலியுத்தி வருகிறார். இதனை மதிக்காமல் ராமநாதபுரம் தி.மு.க.,வினர் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழாவிற்கு ரோட்டை ஆக்கிரமித்து பிளக்ஸ் பேனர்கள், கொடிகள் கட்டியும், பட்டாசு வெடித்தும் அலப்பறை செய்தனர்.
ராமநாதபுரம் ரயில்வே பீடர் ரோட்டில் ரூ.3 கோடியே 62 லட்சத்தில் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.இதனை நேற்று காலை காணொலி காட்சியில்முதல்வர் ஸ்டாலின் திறந்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எம்.எல்.ஏ.,க்கள் ராமநாதபுரம் காதர்பாட்ஷா, திருவாடானை கருமாணிக்கம் குத்துவிளக்கு ஏற்றினர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
போக்குவரத்திற்கு இடையூறு
முதல்வர் ஸ்டாலின் அரசு விழாக்களை எளிமையாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதனை கொஞ்சம் கூட மதிக்காமல் ராமநாதபுரத்தில் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழாவை பெரிய மாநாடு போல நடத்தினர்.
சென்டை மேளங்கள்வைத்து மாவட்டச்செயலாளர் காதர்பாட்ஷா எம்.எல்.ஏ.,வை வரவேற்றனர். 15 நிமிடங்கள் வரை இடைவிடாமல் பட்டாசு வெடித்தனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை துவங்கி ரயில்வே பீடர் ரோடு முழுவதும்ரோட்டைஆக்கிரமித்து கொடிகள், பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர். இதனால் ரயில்வே பீடர் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து வேன்களில் மக்களை அழைத்து வந்து மாஸ் காட்டினர். அரசு அலுவலக கட்டடம் திறப்பு விழாவிற்கு இவ்வளவு ஆடம்பரம் அவசியம் தானா என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
இனிவரும் காலங்களிலாவது போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் அரசு நிதியை வீணாடிக்காமல் அரசு விழாவை நடத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.