/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பள்ளி நேரத்தில் பஸ் கேட்டு முக்காடு போட்டு பெண்கள் மனு பள்ளி நேரத்தில் பஸ் கேட்டு முக்காடு போட்டு பெண்கள் மனு
பள்ளி நேரத்தில் பஸ் கேட்டு முக்காடு போட்டு பெண்கள் மனு
பள்ளி நேரத்தில் பஸ் கேட்டு முக்காடு போட்டு பெண்கள் மனு
பள்ளி நேரத்தில் பஸ் கேட்டு முக்காடு போட்டு பெண்கள் மனு
ADDED : ஜூலை 29, 2024 10:37 PM

ராமநாதபுரம் : பரமக்குடி அருகே வீரவனுார் கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு காவிரி குடிநீர் வேண்டும். பள்ளி நேரத்தில் பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி தலையில் முக்காடிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
வீரனுாரில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் வசிக்கின்றனர். காவிரி குடிநீர் கடந்த 3 மாதங்களாக வரவில்லை. ஆழ்குழாய் கிணறு தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. இதனால் குடம் ரூ.12க்கு குடிநீரை விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர்.
மேலும் கடந்த காலங்களில் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு வசதியாக காலை 8:00 மணிக்குமேல் ராமநாதபுரம், பரமக்குடி வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. இப்பஸ்கள் சில மாதங்களாக வருவது இல்லை.
மாறாக காலை 7:00 மணிக்கு வந்து செல்கின்றன. இதனால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் காலை உணவு அருந்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி வழக்கம் போல காலை 8:00 மணிக்கு மேல் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.
காவிரி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.