ADDED : ஜூலை 31, 2024 04:31 AM
ராமநாதபுரம், : -ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் இந்திய கம்யூ., சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் களஞ்சியம் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் தர்மராஜ், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சண்முகராஜன், தாலுகா துணை செயலாளர் நாகராஜன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.