ADDED : ஜூலை 31, 2024 04:34 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் போட்டித்தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி செயலாளர் சகுந்தலா தலைமை வகித்தார். முதல்வர் ரஜனி முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு பிரிவு அலுவலர் சுதா வரவேற்றார்.
மதுரை அர்த்த சாஸ்திரா பயிற்சி நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் தீபிகா, பயிற்சியாளர்கள் சிவ பரங்கிரி, லோகேஸ்வரன் ஆகியோர் டி.என்.பி.எஸ்.பி.சி., நடத்தும் போட்டித் தேர்வுகளில் பாடத்திட்டம் அடிப்படையில் எப்படி தயாராவது, வெற்றி பெற வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கினர்.
பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். கணிதத் துறைப் பேராசிரியர் சஜிதா ரூபிணி நன்றி கூறினார்.