/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் மக்கள் குறைதீர் முகாமில் குவிந்த மனுக்கள் ராமநாதபுரம் மக்கள் குறைதீர் முகாமில் குவிந்த மனுக்கள்
ராமநாதபுரம் மக்கள் குறைதீர் முகாமில் குவிந்த மனுக்கள்
ராமநாதபுரம் மக்கள் குறைதீர் முகாமில் குவிந்த மனுக்கள்
ராமநாதபுரம் மக்கள் குறைதீர் முகாமில் குவிந்த மனுக்கள்
ADDED : ஜூலை 16, 2024 05:49 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 346 மனுக்கள் பெற ப்பட்டுள்ளன.
முகாமிற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர், இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட 346 மனுக்கள் மக்களிடம் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஒருமாதத்திற்குள் மனுதாரர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 6000 மதிப்புள்ள பேட்டரியில் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர், மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.