/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சேரந்தை பள்ளியில் மரக்கன்று நடுதல் சேரந்தை பள்ளியில் மரக்கன்று நடுதல்
சேரந்தை பள்ளியில் மரக்கன்று நடுதல்
சேரந்தை பள்ளியில் மரக்கன்று நடுதல்
சேரந்தை பள்ளியில் மரக்கன்று நடுதல்
ADDED : ஜூலை 29, 2024 10:33 PM
சிக்கல் : சிக்கல் அருகே சேரந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர் மற்றும் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாக நுழைவு வாயில் பகுதியில் கதவுகள் பொருத்தப்படாமல் இருந்தது. கால்நடைகளின் தொல்லை அதிகரித்து வந்தது. இந்நிலையில் வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் ஏதுமின்றி பொட்டல் தரையாக இருந்தது.
சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தால் மாணவர்கள் சிரமத்தை சந்தித்தனர். இதுகுறித்து ஜூலை 26ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சேரந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஏராளமான மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது.
முறையாக மரக்கன்றுகள் நட்டு பராமரித்து பசுமைப் பள்ளியாக மாற்றுவது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


