/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ காருக்கு ஆர்.சி., புக் வழங்க ரூ.2000 லஞ்சம்; வட்டார போக்குவரத்து கிளார்க் உட்பட 3 பேர் கைது காருக்கு ஆர்.சி., புக் வழங்க ரூ.2000 லஞ்சம்; வட்டார போக்குவரத்து கிளார்க் உட்பட 3 பேர் கைது
காருக்கு ஆர்.சி., புக் வழங்க ரூ.2000 லஞ்சம்; வட்டார போக்குவரத்து கிளார்க் உட்பட 3 பேர் கைது
காருக்கு ஆர்.சி., புக் வழங்க ரூ.2000 லஞ்சம்; வட்டார போக்குவரத்து கிளார்க் உட்பட 3 பேர் கைது
காருக்கு ஆர்.சி., புக் வழங்க ரூ.2000 லஞ்சம்; வட்டார போக்குவரத்து கிளார்க் உட்பட 3 பேர் கைது
ADDED : ஜூலை 29, 2024 11:19 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் புதிய காருக்குஆர்.சி.,புக் வழங்க ரூ.2000 லஞ்சம் வாங்கிய தனியார் கார் நிறுவன மேலாளர், வட்டார போக்குவரத்து அலுவலக டெஸ்பாட்ச் கிளார்க், புரோக்கர் ஆகிய 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் அருகே கீழக்கரை தட்டான் தோப்பு தெருவை சேர்ந்தவர் ரகு 35. மனைவி சுதா பெயரில் டாடா பஞ்ச் காரை 2024 ஜன., 3ல் ராமநாதபுரம் அம்ரிதா நகரில் உள்ள சீமா கார் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வாங்கினார்.
அதற்கான அனைத்து வரிகள், பதிவு கட்டணம் சேர்த்து ரூ.7.32 லட்சம் செலுத்தினார். இந்த புதிய காரை ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2024 ஜன.,30 ல் பதிவு செய்தார்.இது நாள் வரை ஆர்.சி., புக் வழங்காமல் இழுத்தடித்தனர்.
இதுகுறித்து ஆர்.டி.ஓ., அலுவலக டெஸ்பாட்ச் கிளார்க் செய்யது 44, என்பவரிடம் பல முறை கேட்டும் கொடுக்கவில்லை. ஆர்.சி., புக் வட்டார போக்குவரத்து அலுவலக புரோக்கர் நசீர் 43, என்பவரிடம் உள்ளது. அதற்காக ரூ.2500 லஞ்சமாக கொடுத்தால் உடனடியாக கொடுத்து விடுவார் என தெரிவித்துள்ளார்.
புரோக்கர் நசீரை தொடர்பு கொண்ட போது ரூ. 500 ரூபாய் குறைத்து ரூ.2000 கேட்டுள்ளார். கார் நிறுவன மேலாளர் முருகேசனிடம் 53, கேட்ட போது ரூ.2000 கொடுத்தால் ஆர்.சி., புக் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
ரகு ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., ராமச்சந்திரன் வழக்குப்பதிந்தார்.
கார் நிறுவன மேலாளர் முருகேசனிடம்ரசாயனம் தடவிய ரூ.2000 பணத்தை அம்ரிதா நகரில் கார் நிறுவனத்தில் வைத்து ரகு கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
அவரது தகவலின் பேரில் ஆர்.டி.ஓ., அலுவலக டெஸ்பாட்ச் கிளர்க் செய்யது, புரோக்கர் நசீர்ஆகியோரையும் கைது செய்தனர்.