Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ., அலுவலர்கள் கைது

லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ., அலுவலர்கள் கைது

லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ., அலுவலர்கள் கைது

லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ., அலுவலர்கள் கைது

ADDED : ஜூலை 29, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம் அருகே கீழக்கரை தட்டான் தோப்பு தெருவை சேர்ந்தவர் ரகு, 35. மனைவி சுதா பெயரில், 'டாடா பஞ்ச்' காரை வாங்கினார். இந்த புதிய காரை ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2024 ஜன., 30ல் பதிவு செய்தார். இது நாள் வரை ஆர்.சி., புக் வழங்காமல் இழுத்தடித்தனர்.

இதுகுறித்து ஆர்.டி.ஓ., அலுவலக டெஸ்பாட்ச் கிளார்க் செய்யது, 44, என்பவரிடம் பல முறை கேட்டும் கொடுக்கவில்லை. 'ஆர்.சி., புக் வட்டார போக்குவரத்து அலுவலக புரோக்கர் நசீர், 43, என்பவரிடம் உள்ளது. அதற்காக 2,500 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் உடனடியாக கொடுத்து விடுவார்' என்றார்.

அதுபோல, கார் நிறுவன மேலாளர் முருகேசன், 53, என்பவரிடம் கேட்ட போதும், 2,000 ரூபாய் கொடுத்தால் ஆர்.சி., புக் கிடைக்கும் என்றார்.

பணம் கொடுக்க விரும்பாத ரகு, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். கார் நிறுவன மேலாளர் முருகேசனிடம், ரசாயனம் தடவிய 2,000 ரூபாயை, கார் நிறுவனத்தில் வைத்து ரகு கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்தனர்.

அவரது தகவலின் படி, ஆர்.டி.ஓ., அலுவலக டெஸ்பாட்ச் கிளர்க் செய்யது, புரோக்கர் நசீர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

- நமது நிருபர் குழு -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us