/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் 5 ஆடுகள் பலி அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் 5 ஆடுகள் பலி
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் 5 ஆடுகள் பலி
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் 5 ஆடுகள் பலி
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் 5 ஆடுகள் பலி
ADDED : செப் 25, 2025 11:20 PM

திருவாடானை: திருவாடானை அருகே குளத்துார் ஊராட்சி பூசாரியேந்தல் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக் கிராம மக்கள் விவசாய பணிகளோடு ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், தொண்டிராஜ், முனீஸ்வரிக்கு சொந்தமான வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக சென்றன. அப்போது வயல் காட்டில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தன. இதில் மின்சாரம் தாக்கி ஐந்து ஆடுகள் பலியானது.
குளத்துார் ஊராட்சி முன்னாள் தலைவர் குமார் கூறுகையில், இப்பகுதி மக்கள் கால்நடை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். துருப்பிடித்த மின்கம்பிளை மாற்ற வேண்டும் என பல முறை மின் வாரியத்தில் வலியுறுத்தப்பட்டது. தற்போது விவசாய பணிகள் நடந்து வருவதால் விவசாயிகள் வயல் வழியாக நடந்து செல்லவே அச்சம் அடைந்துள்ளனர். எனவே மின்கம்பிகளை மாற்றி, ஆடுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.